சுனாமி அச்சம் காரணமாக காலி மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை

சுனாமி அனர்த்தம் மீண்டும் ஏற்படும் என்ற அச்சத்தில் காலி நகரம் மற்றும் அருகில் உள்ள பிரதேசங்கள் நேற்று வெறுச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுமுறை நாட்களில் இந்தப் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படும். அதிகளவான மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

எனினும் அரச விடுமுறையான நேற்றயை தினம் அந்தப் பகுதியிலுள்ள பல கடைகள் மூடப்பட்டிருந்தன. மக்கள் தமது இல்லங்களில் முடங்கியிருந்தனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படும் என பரப்பப்பட்ட வதந்தி காரணமாக மக்கள் இவ்வாறு அச்சப்பட்டு வீடுகளில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாற்றம் தொடர்பில் காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தருகையில்,

சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அவ்வாறான அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறான ஒரு அனர்த்தம் ஏற்பட்டால் அதற்கான கோபுரங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.