மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பயணத்தின் இடையே அவர் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சில கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்தார். அவர் 3 பேரில் ஒருவராக பயணம் செய்தார்; தலையில் ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை; இதெல்லாம், போக்குவரத்து விதிகளை மீறிய செயல் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி பிரசன்ன காமேஸ்ரா கூறும்போது, “மத்திய பிரதேச மாநில எல்லை வரையில் ராகுல்காந்தி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 3 பேரில் ஒருவராக அவர் பயணம் செய்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். எனவே அவர் போக்குவரத்து விதிகளை மீறினாரா என்பது குறித்து ஆராயப்படும்” என்றார்.