சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இதுதவிர பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் தமிழில் அறிமுகமாகிறார்.
சென்னையில் முக்கால்வாசி காட்சிகளை படமாக்கிய படக்குழு, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து மீண்டும் சென்னை திரும்பியுள்ளது. இன்னமும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட இருக்கிறது. இதைதொடர்ந்து படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.