தேவையான பொருட்கள் :
மாம்பழம் – 1
பேரீச்சம் பழம் – 10
தேன் – 1 ஸ்பூன்
பால் – 1 கப்
பட்டை தூள் – அரை ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவைக்கு
செய்முறை :
* மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* மிக்சியில் பேரீச்சம் பழம் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* அடுத்து அதில் மாம்பழ துண்டுகள், பால், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பட்டை தூள் தூவி பருகவும்..
* சத்தான சுவையான மாம்பழ – பேரீச்சம்பழம் ஸ்மூத்தி ரெடி.