மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிந்து சாம்பல்

மஹியங்கனையில் சற்று முன்னர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் மஹியங்கனையில் நடத்தப்பட்டு வந்த ரிச் சூ பெலஸ் எனும் காலணி வர்த்தக நிலையமொன்றே இன்று முன்னிரவில் தீக்கிரையாகி சாம்பலாகியுள்ளது.

குறித்த தீவிபத்தின் போது தீயை அணைப்பதற்குத் தேவையான ஒத்தாசைகள் உரிய நேரத்தில் கிடைக்காத அதே நேரம், பொதுமக்களும் அப்பிரதேசத்துக்கு விரைந்து வருவதிலிருந்தும் தடுக்கப்பட்டிருந்தனர்.

பொதுபல சேனாவின் மஹியங்னை அமைப்பாளர் ஒருவர் அண்மையில் அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க கட்சியொன்றில் தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னணியில் மஹியங்கனைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.