யுத்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவருடன் தாமும் உடன்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பி்ட்டுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கடுமையான யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை மறுக்கவில்லை.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவிக்கும் அரசாங்கம், போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர் ஒருவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காது.
போர்க்குற்ற வழக்கில் சாட்சியமளிக்கப் போகும் முதற்சாட்சியாலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
இதன் நோக்கம் எதிர்க்கட்சித் தலைவருக்கு புலனாகும். எனினும் தர்மசங்கடத்தை உண்டுபண்ண விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.