யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல்!!

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மின் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில், காலை 8.30 முதல் மாலை 5.30 வரை துரையப்பா விளையாட்டரங்கு, நுணாவில், கைதடி, நாவற்குழி, புன்னாலைக்கட்டுவன் போன்ற பகுதிகளில் மின் விநியோக தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலாலி, மயிலிட்டி, பலாலி விமானப்படை முகாம், பலாலி இராணுவ முகாம், பலாலி விமானப்படை விடுதி மற்றும் கைதடி வடமாகாண சபை அலுவலகம் போன்ற பிரதேசங்களிலும் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளின் மேற்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இந்த மின் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.