இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பயண நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பேஸ்புக் உட்பட இணைய ஊடகங்கள் ஊடாக குறித்த ஜோதிடர் போலி ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
இந்த சோதிடர் முன்னாள் அரச தலைவர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவராகும். தற்போதும் அவர் இந்த ஜோதிடரின் ஆலோசனை பெற்றுக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு போலி ஆரூடம் வெளியிட்டு மக்களுக்கு மத்தியில் மூட நம்பிக்கைகளை பரப்பும் இவ்வாறான ஜோதிடர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோதிடர் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விரும்பும் அபிருவித்தி அமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரதீப் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போலி ஆரூடங்களை வெளியிட்டு, மக்களை அச்சப்பட வைத்தமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் பேராசிரியர் முன் வைத்துள்ளார்.