இன்றைய ராசி பலன்கள் 10.06.2017

  • மேஷம்

    மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியா பாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நிம்மதியான நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • மகரம்

    மகரம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தி யமாக சமாளிப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். அசதி, சோர்வு வந்து நீங்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார் கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் உதவுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • மீனம்

    மீனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நினைத்ததை முடிக்கும் நாள்.