நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் கனவில் கூட வந்துவிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழகத்தின் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில். தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி, விஷாலாக இருந்தாலும் சரி கனவில் கூட உங்களுக்கு சிந்தனை வந்துவிடக்கூடாது.
அப்படி நடைபெற்றால் மானத்தமிழன், மராட்டியன் என தமிழ்நாட்டில் சண்டை நடைபெறும் சூழ்நிலை ஏற்படும்.
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜனதா ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நெருக்கடிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார்.