ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குநர் Oliver Stone ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பற்றி The Putin Chronicles என்கிற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்.
நான்கு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்த ஆவணப் படத்தில், ஓர் அதிபரின் ஒருநாள் வாழ்க்கை முதல் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எர்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்தது வரை என பல்வேறு விஷயங்களைப் பற்றி புடின் இதில் பேசியுள்ளார்.
அதில், ரஷ்ய நாடாளுமன்றம் எப்போதாவது மோசமான தினமாக உங்களுக்கு இருந்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனக்கு மோசமான நாட்கள் எதுவுமில்லை.
நான் பெண் அல்ல, இதை யாரையும் அவமதிப்பதற்காக கூறவில்லை. சில இயற்கை நிகழ்வுகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன் என்கிற பாணியில் பேசியுள்ளார்.
அதாவது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பற்றியும் அத்தகைய நாட்களில் அவர்கள் திறம்பட வேலை செய்வதில்லை என்பதையுமே புடின் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
புடினின் இந்த கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.