ஸத்யவ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜனபோஷக:
ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்கசக்ரலஸத்பாணி: ஸரணாகதரக்ஷக:
– ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள் :
சத்யவிரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம். அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே, ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம். தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே, வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம். சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.
(இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.)