தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் செந்தில் குமரன். நியூயார்க் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்து கனடாவில் மார்கெட்டிங் தொழில் செய்து வருகிறார்.
இதுமட்டுமல்ல, தமிழ் மொழி மீதும், தமிழ் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட செந்தில்குமரன், 2003-ம் ஆண்டு முதல் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
2016-ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில் இசையமைப்பாளர் இமான் இசையில் சூப்பர் ஹிட்டான ‘கூடைமேல…’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டார். இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
கடந்த 2 வருடங்களில் ‘சந்தோஷம்’, ‘முதல் காதல்’, ‘வேல் வேல்’ என 3 தனி பாடல்களை இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
அழகான பழைய அரங்கத்தை கிராமிய பாரம்பரிய தோற்றத்துடன் மாற்றி, அங்கு கனடா மற்றும் தமிழ் இசை ஆர்வலர்கள் பங்கேற்ற ‘மஞ்சள் வெயில்’ உள்ளிட்ட 3 பாடல்களை பதிவு செய்துள்ளார். இந்த பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.