வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும். மும்மொழி கற்கைகள் நிலையத்தில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 718 பயிலுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி இடம்பெற்றது.
2015, 2016 ஆம் ஆண்டு ஆங்கிலம், ,சிங்களம். கற்கைநெறியினை ஆரம்பித்து பூர்த்தி செய்த 718 மாணவர்களுக்கு இன்றைய தினம் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.