கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு அக்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 10இற்கு அதிகமான கிளைமோர் குண்டுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றையதினம் காணி உரிமையாளரினால் காணி துப்பரவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது ஒவ்வொரு பத்துமீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் புதைந்த நிலையில் தென்பட்ட கிளைமோர் குண்டுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் குண்டு செயழிக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மேற்படி புதையுண்ட வெடிபொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்துள்ளார்.