பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் பலியாகினர். மேற்காசிய நாடான ஈராக்கின் முசயிப் நகரில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டில் பயங்கரவாதிகள் கொலை படை தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் பலியாகினர்; 17 பேர் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.