அண்மைய வெள்ளம் மண்சரிவு அனர்த்தங்களினால் சபரகமுவ மாகாணத்தில் 26 ஆயிரம் மாணவர்களின் பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவை அழிவடைந்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள், புத்தகப் பைகள் கற்றல் உபகரணங்கள் என்பவற்றுடன் தண்ணீர் கொண்டு செல்லும் போத்தல்கள் காலணிகள் பாடசாலை சீருடைகள் என்பன தேவைப்படுவதாக சபரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய கூறியுள்ளார்.
ரத்தினபுரி நிவித்திகல தெஹியோவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.