இலங்கையில் வெள்ளம்: 49 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த அமெரிக்க நிறுவனம்

இலங்கையில் ஆறுகளை குறுக்கறுத்து நீர்தேக்கங்கள் நிர்மாணிக்கப்படுவதால், வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் என்று 49 வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க பொறியியல் நிறுவனம் ஒன்று எச்சரித்திருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் களு, ஜின் மற்றும் நில்வள ஆறுகளில் அணைகளை அமைக்காவின் ஈசிஐ பொறியியல் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் இதன்மூலம் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை தவிர்க்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.