முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு பொதுபலசேனா காரணம் அல்ல! கோத்தபாய

முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபாரத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றமைக்கு பொதுபலசேனா காரணம் அல்ல என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

தமது பேஸ்புக் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனாவின் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் தமதுபதிவில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவங்களுடன் தமது பெயரை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சதொடர்புபடுத்தியமையையும் அவர் விமர்ச்சித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பின்னால் அரசியல் உள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.