ஒற்றுமை மாத்திரமே இலங்கையை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி உனா மெக்கௌலி தெரிவித்துள்ளார்.
எனவே இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெறுக்கத்தக்க வன்முறைகள் இடம்பெற்றுள்ளமையை அடுத்தே ஐக்கிய நாடுகள் அதிகாரியின் கருத்துகள் வெளியாகியுள்ளன.