தீர்மானம் மேற்கொள்ள கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

புதிதாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள அரசியல் கட்சிகள் குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது 64 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது 16 கட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.