தனியாக ஆட்சியமைக்கும் நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி

தனியாக ஆட்சி அமைக்கும் எண்ணத்தை ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் கைவிடவில்லை என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கட்சியை விடவும் நாடு முக்கியமானது என்ற காரணத்தினால் இவ்வாறு கூட்டாக ஆட்சி நடத்துகின்றோம்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு மேலும் வெற்றிகளை ஈட்டிக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டியது அவசியமானதாகும்.

நாடு இன்று பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ளது. இந்தக் கடன்களை செலுத்தாது நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது.

இந்தப் பிரச்சினையிலிருந்து மீளும் வரையில் சில சவால்களை எதிர்நோக்க நேரிடும். இதனை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.