கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் யாசகம் கேட்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அவர்களைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் 18 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூலமாக இவர்களை யாசகம் கேட்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களைக் கைது செய்து சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 சிறுவர்களில் நால்வர் சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 14 பேர் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மகளிர் சிறுவர் பாதுகாப்புப் பொலிஸ் பிரிவின் தலைமையகத்தாலும் அதன் 42 கிளை அலுவலகங்கள் மூலமாகவும் யாசகம் கேட்கும் சிறுவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.