சர்வதேச விவகாரமாக மாறும் ஞானசார தேரரின் அட்டகாசங்கள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்காக அரசு ஞானசார தேரரின் விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இந்த அரசு ஏற்கனவே பல நொண்டிச்சாட்டுக்களைக் கூறி வந்திருக்கிறது. இப்போது ஞானசார தேரரின் விவகாரத்தைப் பூதாகரமாக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க அஞ்சுவதாலேயே இவ்வாறான சாக்குப்போக்குகளை இந்த அரசு அவிழ்த்து வருகின்றது என்பது சர்வதேசத்துக்கும் இலங்கை மக்களுக்கும் நன்றாகப் புரிந்திருக்கின்றது.

பல்வேறு நொண்டிச்சாட்டுக்களைக் கூறி ஏற்கனவே பலமுறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்த அரசுக்கு இப்போது ஞானசார தேரரின் நாடகம் கிடைத்திருக்கிறது என மஹிந்த அணியான கூட்டு எதிரணியின் பேச்சாளர் காமினி லொக்குகே என தெரிவித்துள்ளார்.