திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர்.
அதிமுக இரு அணிகள் தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில், இரு அணிகளும் இணைவதற்கு இருதரப்பிலும் சாதகமான நிலை ஏற்படவில்லை. இருதரப்பிலும் முரணான கருத்துக்கள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.