மராட்டிய மாநிலத்தில் இந்தாண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால், மாநில அரசானது வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.
நாளை அனைத்து விவசாயிகளும் ஒன்றினைத்து போராட்டம் நடத்த இருந்த நிலையில், சிறு மற்றும் குறு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில அரசு இந்த முடிவெடுத்துள்ளதாக மாநில வருவாய்துறை மந்திரி பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட நிபந்தனைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தனிக்குழு அமைத்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அரசின் அறிவிப்பை அடுத்து, நாளை நடைபெற இருந்த மாபெரும் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.