சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி ஒரு போதும் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது. நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து சாம்பியன்ஸ் கோப்பையில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
மல்லையாவை கேலி செய்த ரசிகர்கள்
வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் இந்திய தொழிலதிபர் விஜய்மல்லையா தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். லண்டனில் நேற்று நடந்த இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க வருகை தந்தார். அவரை பார்த்த ரசிகர்களில் சிலர்… ‘திருடன் போகிறான்…. திருடன்… திருடன்’ என்று குரல் எழுப்பி கேலி செய்தனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
ஒரே முனைக்கு ஓடி வந்த பாப் டு பிளிஸ்சிஸ், மில்லர். பிறகு மில்லர் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
அரைஇறுதியில் வங்காளதேசத்துடன் மோதல் :
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 5-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இந்திய அணி அடுத்து வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா-வங்காளதேசம் இடையிலான அரைஇறுதிஆட்டம் வருகிற 15-ந்தேதி பர்மிங்காமில் நடக்கிறது.
ரன்-அவுட்டில் அசத்திய இந்தியா :
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய பீல்டர்கள் டிவில்லியர்ஸ், மில்லர், இம்ரான் தாஹிர் ஆகிய 3 பேரை ரன்-அவுட் ஆக்கி அசத்தினர். இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை 6 பேரை ரன்-அவுட் ஆக்கி உள்ளது. வேறு எந்த அணியும் 2 பேருக்கு மேல் ரன்-அவுட் செய்ததில்லை.