புகழ்பெற்ற கால்பந்து வீரர் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வாடகை தாய் மூலம் ஏற்கனவே 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் வாடகை தாய் மூலம் ரொனால்டோ மீண்டும் தந்தை ஆகி இருக்கிறார்.
ஆண், பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. எவா, மாட்டேவ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அங்குள்ள சேனல்கள் வெளியிட்டுள்ளதே தவிர ரொனால்டா தரப்பில் யாரும் வாய் திறக்கவில்லை. ரொனால்டோவுக்கு ஜார்ஜினா ரோட்ரிகஸ் என்ற காதலி இருப்பது குறிப்பிடத்தக்கது.