‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்யவிருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ‘மருது’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தற்போது வில்லனில் இருந்து ஹீரோவாக புரோமோஷனாகி ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.