பழங்களில் பப்பாளிப் பழத்தை பலர் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் அதற்காக இதில் சத்துகள் குறைவு என்று அர்த்தமில்லை.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பப்பாளிப் பழத்தில் ஏராளமான சத்துகளும், மருத்துவப் பயன்களும் உள்ளன.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்டுகள், வைட்டமின் ஏ, சி, இ போன்ற உடம்புக்கு அவசியமான ஆரோக்கியச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
பப்பாளிக் காயை தினமும் கூட்டாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப் படியாக குறைந்து மெலிவடையும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாகப் பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பின் ஊறியதும் சுடுநீரால் கழுவி வர, முகத்தில் ஏற்படும் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழியும், வயிற்றுப் புண்கள் குணமாகும்.
குழந்தைகளுக்கு தினமும் பப்பாளி பழத்தைக் கொடுத்தால், அவர்களின் உடல் வளர்ச்சி நன்றாகி, பல், எலும்பு போன்றவை வலுப் பெறும்.
தினமும் பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் தடுக்கப்படும்.
பப்பாளிப் பழத்தை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப்புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.
பப்பாளிப் பழத்தை நாம் தினமும் உண்டு வருவதன் மூலம் கண் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள், புற்றுநோய் அபாயம் நம்மை நெருங்காமல் காத்துக்கொள்ளலாம்.