தித்திப்பான பேரீச்சம் பழம்: தினசரி 3 சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்

பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், விட்டமின் A, B, B2, B5, E போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இதை தினமும் மூன்று தவறாமல் சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

நன்மைகள்
  • மூன்று பேரீச்சம் பழத்தை முதல் நாள் இரவிலேயே ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து, காலையில் அதை குடித்து வந்தால், அது செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை தடுக்கிறது.
  • பேரீச்சை பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ரத்த உற்பத்தியை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ரத்தச்சோகை போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  • பேரீச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
  • பேரீச்சையில் உள்ள இனிப்பு சுவையில் சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் போன்றவை அதிகமான நிறைந்துள்ளது. எனவே இது மந்தநிலை போன்ற சோர்வுத்தன்மை பிரச்சனையை தடுக்கிறது.
  • எலும்பின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் அதிகமாக உள்ளதால், இது ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • பேரிச்சம் பழத்தில் உள்ள விட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.
மூன்று பேரீச்சம் பழத்திற்கு மேல் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
  • தினமும் ஆறு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
  • பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது மாலைக்கண் நோயை குணமாக்கும்.
  • பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை தடுக்கும்.
  • பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்த உதவுவதுடன், வயிற்றுப் புற்றுநோயை குணப்படுத்துகிறது.
பேரீச்சம் பழத்தினை எப்படி சாப்பிடலாம்?
  • பேரீச்சம் பழமானது உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அதை நன்கு கழுவிய பின் சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.
  • பேரீச்சம் பழத்தை பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி ஆகியவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் அல்லது தனியாகவும் சாப்பிடலாம்.
  • பேரீச்சை பழத்தின் விதையை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காபியாக குடிக்கலாம்.
  • தினமும் பேரீச்சம் பழத்தை நட்ஸ்களுடன் சேர்த்து இரண்டுவேளை சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.