யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பெண்ணொருவர்வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
வாள்வெட்டு சம்பவத்தில் 43 வயதுடைய கந்தசாமி
கவேஸ்குமாரி எனும் மூன்று பிள்ளைகளின் தாயார் கையில்
காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண் மீது
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் வாளால் வெட்டி விட்டு
தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வாள்வெட்டுச் சம்பவம் ஏற்கணவே இரு குடும்பங்களுக்கு
இடையில் காணப்பட்ட பகை காரணமாக ஏற்பட்டதாக பெண்ணின்
கணவன் எமது செய்திச் சேவைக்கு தெரிவத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.