வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று சிறப்பாக நடைபெறுகின்றது.
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு காலை ஐந்து மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.
அதன்பின்னர் ஆலய நிகழ்வு நடைபெற்று பூசைக்குரிய தூளி பிடிக்கும் நிகழ்வும் பின்னர் காலை ஏழு மணியில் இருந்து பூசைகள் இடம்பெற்றன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.