இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் ஏற்றுக்கொள்ள கூடிய தகவல் கிடைத்தால் அதனை மக்கள் மத்தியில் முன்வைக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளானது.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் பொலிஸார் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். சில கருத்துகள் இனவாதமானவைகள்.
இதேவேளை அண்மையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கடுமையாக திட்டிய பிரதேச ஊடகவியலாளர் என்னை சந்தித்தார்.
அமைச்சர்கள் தங்கள் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்வது மிகவும் முக்கியம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.