யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் தலையீடு செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருடன் கலந்துரையாடி வழக்கில் தலையீடு செய்ததாக மாங்குளம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக ஏற்கனவே மற்றில் அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளைஇ இந்த சம்பவத்தின் சந்தேகநபர்களான 5 பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன் போது சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தனர்.
ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போதிலும்இ மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்துஇ சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கடமையிலிருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.