சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி கோகில் ஆரியதாச மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் இணைந்து தென்மராட்சிப் பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை தொடர்பான கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்ற வாரம் விளக்கமளிக்கும் செயலமர்வு சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்றது.
இங்கு மாணவர்கள் வீதியால் மாணவர் எப்படி செல்லவேண்டும்விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளுவது காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவிகள் வழங்குவது தொடர்பான கருத்துரைகளை உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆர்.பிரதிப் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.