காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடை போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களால் ஆறு நாடுகளில் ஒருங்கிணைந்த மாபெரும் போராட்டம் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடை உறவுகளுடைய பேராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து , பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைநகர்களில் இன்றையதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டத்தினை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகள் நாடுகடந்த தமிழீழ அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் தற்போது முக்கிய பிரச்சனையாகவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் புலம்பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டதில் புலம்பெயர் தமிழர்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.