வாஷிங்டன்: பயங்கரவாதத்திற்கு நிதி கொடுக்கும் நாடுகளை தடுத்து நிறுத்த பயங்கரவாதம் என்ற மிருகத்தினை பட்டினி போட வேண்டும் என அமெரிக்க அதிபர் கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது மற்றும் கத்தாரின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டி மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை நாம் வெற்றி கரமாக முறியடித்து விட்டோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரித்து அதற்கு நிதியும் வழங்கி வருகிறது. இதனை முறியடித்து நிதி கொடுக்கும் நாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதன் மூலம் பயங்கரவாதம் என்ற மிருகத்தை பட்டினி போட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.