பகிரங்க மன்னிப்பு கோரிய முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த வார இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாபலகம மத்திய மகா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு சென்றவர், “நான் முதலாவதாக மன்னிப்பு கோருகின்றேன். நிகழ்வுகளுக்கு செல்லும் போது நான் இவ்வாறான உடை அணிந்து செல்வதில்லை.

சேறு நிறைந்திருக்கும் என நான் நினைத்தேன். நான் சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரிக்கு சென்றிருந்தேன். அங்கு சேற்றுக்குள் நடக்கும் நிலை ஏற்பட்டமையினால் சப்பாத்து அணிந்து தான் செல்ல நேரிட்டது. அதன் காரணமாக இவ்வாறான உடையில் வந்தேன் என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வடக்கை சேர்ந்த பிள்ளைகள் தெற்கிற்கு வந்துள்ளனர். தெற்கை சேர்ந்த பிள்ளைகளை வடக்கிற்கு அழைத்து செல்ல வேண்டும் என சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது முதலமைச்சர் ஷான் பியசேன கமமேயும் அங்கிருந்தார்.