கேட்ச்சுகளை தவறவிட்டதால் தோற்றோம்: இலங்கை கேப்டன் மேத்யூஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலையில் களம் இறங்கிய இலங்கை தோல்வி அடைந்து வெளியேறியது.

இதுகுறித்து அந்த அணி கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், நாங்கள் போதுமான ரன்களை சேர்க்கவில்லை. இருந்தாலும் நெருக்கடி கொடுப்போம் என்பதை அறிந்து இருந்தோம்.

பந்துவீச்சாளர்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்தனர். ஆனால் கேட்ச்சுகளை தவறவிட்டால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அனுபவமில்லாத அணியை வைத்து கடுமையாக போராடினோம். எங்களது அணி வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்.