சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. மூன்று லீக் ஆட்டத்தில் இரண்டில் அவுட்டாகாமல் அரை சதம் அடித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் டி வில்லியர்ஸ் முதல் இடத்தில் இருந்தார். வார்னர் 2-வது இடத்திலும், விராட் கோலி 3-வது இடத்திலும் இருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு அரை சதங்கள் அடித்ததன் மூலம் விராட் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 862 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டி வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அரை சதங்களும், ஒரு சதமும் விளாசிய தவான் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் 732 புள்ளிகளுடன் முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இம்ரான் தாஹிர் 2-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 3-வது இடத்திலும், ரபாடா 4-வது இடத்திலும், சுனில் நரைன் 5-வது இடத்திலும் உள்ளனர்.