பாரீசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலம் வருகிற நவம்பர் மாதம் லண்டனில் நடக்கும் உலக டூர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு ரபெல் நடால் முதல் வீரராக தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டியில் உலக தரவரிசையில் ‘டாப்-8’ வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.