தேவையான பொருட்கள் :
அவகேடோ – ஒன்று,
உதிர்த்த ஸ்வீட் கார்ன் – ஒரு கப்,
பூண்டு – 2 பல்,
காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
மிளகுத்தூள், வெண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* அவகேடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும்.
* பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில்… அவகேடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.
* கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த அவகேடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும். 6 முதல் 8 நிமிடம் கொதித்தால் போதுமானது.
* கடைசியாக இறக்கும் போது அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
* சூப்பரான அவகேடோ – கார்ன் சூப் ரெடி.