பிரெஞ்ச் ஃபிரைஸ் என்று அழைக்கப்படும் வறுத்த உருளைக்கிழங்கை தொடர்ந்து உட்கொள்வதால் விரைவில் மரணம் நிகழும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
உப்பும், காரமும் கொண்ட பிரெஞ்ச் ஃபிரைஸ், கண்டங்கள் தாண்டி உலகின் பெரும்பாலான மக்களைப் பரவசமடையச் செய்யும் சிற்றுண்டி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சிற்றுண்டிக்கு அடிமை என்றே சொல்லலாம். சூடான, மொருமொருப்பான பிரெஞ்ச் ஃபிரைஸ் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்க முடியுமா? கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் இருக்கும்.
ஆனால், அடிக்கடி பிரெஞ் ஃபிரைஸ் உட்கொண்டால் விரைவில் மரணம் ஏற்படும் என்று அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்டிஷன் பத்திரிக்கையில் வெளியான ஓர் ஆய்வு கட்டுரை கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் குழு 8 ஆண்டுகளாக 45 முதல் 79 வயது கொண்ட 4,400 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து பிரெஞ்ச் ஃபிரைஸ் சாப்பிடும் இந்த 4,400 பேரையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர். இந்த 4,400 பேரில் 236 பேர் அடிக்கடி பிரெஞ்ச் ஃபிரைஸ் சாப்பிடும் காரணத்தால் விரைவில் மரணமடைந்தனர் என்று இந்த ஆய்வாளர் குழு கண்டுபிடித்துள்ளது.
இறந்தவர்கள் அனைவருமே ஹொட்டல்களுக்கு சென்றாலும், வீட்டில் சமைத்தாலும் வறுத்த உருளைக்கிழங்குகளை அதிகமாக உட்கொண்டார்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
மேலும், வேகவைத்த உருளைக்கிழங்கு, கிரில் முறையில் சமைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என தெரிய வந்துள்ளது.
பிரெஞ்ச் ஃபிரைஸ் எனப்படும் எண்ணெயில் பொறித்த உருளைக்கிழங்கு மட்டுமே உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது. காரணம் அவை, ஃபைபர், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட் ஆகியவற்றால் பேக்கிங் செய்யப்படுகிறது.
மேலும் பயன்படுத்தும் எண்ணெய், பொறிக்கும் முறை, சில்வர் பேப்பர் போன்ற பேக்கிங் பொருட்கள் உடலுக்கு தீங்காக மாறி மரணத்திற்கு இட்டுச் செல்கிறது என்கிறது இந்த ஆய்வு.