யானை முகம் படைத்தவரே,
ஏக தந்தமுடையவரே வரமளிப்பவரே,
ஈசன் மகனே போற்றி போற்றி.
அமைதி தருபவரே போற்றி.
விக்னங்களை அழிப்பவரே,
இஸ்வர்யம் தருபவரே போற்றி.
பிறைநிலா சூடி பாலச்சந்திர ரூபமுடயவரே,
பிரபஞ்சத்திற்கு அதாரமாக இருப்பவரே போற்றி.
பிரபஞ்சத்தை தோற்றுவித்த பரம்பொருளே போற்றி.
பாசாங்குசம் கரங்களில் ஏந்தி எம்மை
காத்து அருள வேண்டும் பெருமானே.
வஜ்ரதந்தம் தரித்து விபத்துக்களை அழிப்பவரே வணக்கம்.
அருகம்புல் அலங்கரித்த லம்போதரனே வணக்கம்.
கரத்தில் மோதகம் வைத்து வரமளிப்பவரே வணக்கம்.
யமபயம் போக்கும் அருள் கலந்த
பார்வையால் என்னை நோக்கவேண்டும்.
தொந்தி கணபதி, தேவ கணங்களால்
தங்கள் பாத கமலங்கள் வணங்கபடுகின்றன.
எல்லையற்ற பரம்பொருளே நாகராஜன்
கொடை பிடிக்க தீயவரை தண்டித்து,
பக்தர்களை காப்பவர் நீங்கள்.
அளவற்ற குணமுடயவரே தங்களை வணங்குகிறோம்.
நினைத்ததை நிறைவேற்றி வைப்பவர் நீங்கள்.
கணநாதா கணேசானபிரபு உங்கள்
தாள் பணிந்த என்னை காத்தருள வேண்டும்.
கருணைக்கடலே ஏழை என் மீது அருள் புரிய வேண்டும்.
சில முத்தான வார்த்தைகளால் அமுதமாக பாடப்பட்ட இந்த துதியை கணபதி பாத கமலங்களில் சமர்பிக்கின்றேன்