வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.