நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவர் பணி நீக்கம்! ஜனாதிபதி அதிரடி உத்தரவு

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உப தலைவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையில் ஆவணங்களை தயாரித்து வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உப தலைவர் சட்டத்தரணி சுஜீவ சமரசிங்க பணி நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிக்கை ஒன்று அவுஸ்திரேலிய நீதிமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.