-
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
-
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
கன்னி
கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பயணங்கள் சிறப்பாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதரர் உதவுவார். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
-
தனுசு
தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
-
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அழகு, இளமை கூடும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சி யம் வேண்டாம். போராட்டமான நாள்.
-
மீனம்
மீனம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.