தயாசிறி அமைச்சு காரியாலய மண்ணை மிதிக்கமாட்டேன்!! சுசந்திகா விடாப்பிடி

தயாசிறி ஜயசேகர விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் வரையில் அமைச்சுக் காரியாலய மண்ணை மிதிக்க மாட்டேன் என முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சு அதிகாரிகள் பலவந்தப்படுத்தியதனால் இரண்டு மாத சம்பளத்தைப் பெற்றுக் கொண்டதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பிரச்சினையில் தலையீடு செய்த காரணத்தினால் தமது சம்பளத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக அமைச்சர் கூறிய போதிலும் உண்மையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுசந்திகாவுடனான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.