வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்சியான தகவல்!

வட மாகாண இளைஞர்களின் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருளாதார மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வவுனியா, மாங்குளம் பகுதியில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார மையம் உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கட்டத்தின் கீழ் பொருளாதார மையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முழுமையான நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் அதன் ஊடாக 5000 தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என அவரது அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முதலீட்டு மையத்தில் முதலீடு செய்வதற்காக இதுவரையில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.